உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் வெட்டி கடத்தல் வி.ஐ.பி., ஏரியாவில் தைரியம்

ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் வெட்டி கடத்தல் வி.ஐ.பி., ஏரியாவில் தைரியம்

கோவை:கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில், சந்தன மரம் வெட்டி கடத்தியவர்களை போலீசார் தேடுகின்றனர்.ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான கட்டடங்கள் பல மோசமான நிலையில் இருந்ததால், இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. இங்குள்ள தொழிலாளர் நலத்துறை குடியிருப்பு பகுதியில், ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இதை பயன்படுத்தி, குடியிருப்பு அருகே வளர்ந்திருந்த சந்தன மரத்தை, மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வெட்டி கடத்தியுள்ளார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, சந்தன மரம் வெட்டி கடத்தியவர்களை தேடிவருகின்றனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் வசிக்கும் இப்பகுதியில், சந்தன மரம் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை