உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.பி., காரில் மோதி விபத்து மற்றொரு வாலிபரும் பலி

எஸ்.பி., காரில் மோதி விபத்து மற்றொரு வாலிபரும் பலி

மேட்டுப்பாளையம்:நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேலு வாகனம், கோவை செல்வதற்காக நேற்று முன் தினம் ஊட்டியில் இருந்து புறப்பட்டது. அந்த வாகனத்தில் எஸ்.பி., இல்லை.கல்லார் துாரிப்பாலம் அருகே திடீரென எதிரே வந்த பைக், வாகனத்தின் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஊட்டியை சேர்ந்த அல்டாப், 21 மற்றும் ஜூனைத், 21, ஆகிய இரு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த அல்டாப் வரும் வழியிலேயே உயிரிழந்தார். ஜுனைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அவரும் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி