உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம்; மாநிலம் முழுவதும் செப்டம்பரில் அமல்

காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம்; மாநிலம் முழுவதும் செப்டம்பரில் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களை, மது பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் வகையிலான திட்டத்தை அமல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.இந்த வழக்கு, சிறப்பு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரும்ப பெற்ற மதுப்பாட்டில்களை விற்பனை செய்ததன் வாயிலாக, 250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்க உள்ளது என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து,மாநிலத்தில் நாளொன்றுக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில், 'ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் வரை விற்கப்படுகின்றன. முதற்கட்டமாகமலைவாசஸ்தலங்களில், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடலுார், அரியலுார், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில், வரும் 15ம் தேதி முதல் காலி மதுப்பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. செப்டம்பர் முதல், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்பட உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 06, 2024 12:01

இதே ஒரு நல்ல திட்டம் ஏனெனில் சைட் போட்ட பூமிகளில் அளவு கடந்த பாட்டில்கள் அந்த வழியாக டிராக்டர் போகும்போது நொறுங்கிவிடும் கால்நடைகளும் அதை பராமரிப்பவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டுள்ளவர்களுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கலாம் பார்ப்போம். மெனாபாசிட்டுறேர் விடுவானா ? காலிபாட்டில்னால் ரீ செல் சாத்தியமா ?


angbu ganesh
ஜூலை 06, 2024 11:30

வடிவேலு, கவுண்டமணி சந்தனம் எல்லாம் பிச்சை எடுக்கணும் இந்த காமெடிக்கு முன்னால


SIVA
ஜூலை 06, 2024 10:51

அப்படியே கள்ள பாக்கெட் சாராயம் குடித்த பின் அந்த பிளாஸ்டிக் PAPERKALIYUM இரண்டு ரூபாய்க்கு திரும்ப பெற்று கொண்டால் பூமிக்கும் நல்லது , பாக்கெட் சாராயம் விற்ற ஆதாரமும் இருக்காது , நல்லது சொன்ன யார் கேக்கின்றார்கள் ....


Jegan
ஜூலை 06, 2024 08:58

என்னிடம் 250க்கும் மேற்பட்ட காலி மதுபாட்டுகள் பதுக்கி வைத்துள்ளேன் என்ன செய்யலாம்?


SP
ஜூலை 06, 2024 08:57

இதெல்லாம் திட்டம் என்ற பெயரில் வருவது கேவலம்.எவ்வளவு அசிங்கபடுத்தமுடியுமோ அவ்வளவையும் தமிழகத்தில் அரங்கேற்றுகிறார்கள்


GMM
ஜூலை 06, 2024 07:48

தவறான திட்டம். இது ஒரு திட்டம் என்று கூற வெட்கமாக இருக்கும். கழிவுகள் அகற்ற வேண்டியது உள்ளாட்சி அமைப்புகள். விற்பனை செய்யும் டாஸ்மாக் பாட்டிலை திறந்து தர வேண்டும். நீண்ட தூரம் எடுத்து செல்ல முடியாது. அருகில் குடித்து, குடிசுவர் ஆக்கி சென்று விடுவர். இரவு கடை மூடிய பின் காலி பாட்டில் அகற்றி, கழிவு கிடங்கில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். அதிக கழிவுகள் உற்பத்தி செய்யும் கடைகளுக்கும் இது பொருந்த வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 07:19

ஏற்கனவே பாட்டிலுக்கு பத்து ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரை அழவேண்டியிருக்கிறது. நிதிமன்றம் சொன்னது போல இன்னும் பத்து ரூபாய் கூடுதலாக அழவேண்டும் என்றால் பொதுமக்கள் குடிக்க வழியில்லாமல் அழிந்து போவார்கள்.


Ravichandran
ஜூலை 06, 2024 07:13

தமிழக மக்கள் வாழ்க்கையை மேன்மேலும் சிறக்க செய்யும் திட்டம்.


N thirumalsi
ஜூலை 06, 2024 07:13

அப்படி என்றால் இப்பொது வாங்கும் கமிஷன்ரூபாய் 10 + புதிய வரவு 10 நல்ல முடிவு


N Sasikumar Yadhav
ஜூலை 06, 2024 07:12

காலி சாராய பாட்டில் கொடுத்தால் 10 ரூபாய் திமுக தலைமையிலான அரசு கொடுப்பது ஆனால் அதே கள்ளச்சாராயம் குடித்து உங்க பாடியை கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் திமுக தலைமையிலான விடியாத திமுக அரசு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை