உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வில் ஜொலித்த மாணவியருக்கு உதவித்தொகை

பொதுத்தேர்வில் ஜொலித்த மாணவியருக்கு உதவித்தொகை

வால்பாறை;வால்பாறையில், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை கிராமீன் கூட்டா தனியார் நிறுவனத்தின் சார்பில், கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆண்டு தோறும், 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகையினை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி வழங்கினார்.நிகழ்ச்சியில், கிராமீன் கூட்டா நிறுவனத்தின் மண்டல மேலாளர் பாஸ்கரன், ஏரியா மேலாளர் ரமேஷ், கிளை மேலாளர் ஈஸ்வரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை