| ADDED : ஜூன் 21, 2024 01:21 AM
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பல்வேறு பாடப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு பெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.விழாவுக்கு, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ''அறக்கட்டளை சார்பில் 1960 மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ''2023--24ம் ஆண்டில் 4,060 விண்ணப்பங்களில் 476 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதில், வேளாண் பல்கலையில் பயிலும் 39 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.வங்கி கிளையின் மூத்த துணைத் தலைவர் ஏக்பால் மனோஜ் பேசுகையில், ''ஒவ்வொரு மாவணர்களுக்கும் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், விடுதி வாடகை, மெஸ் கட்டணம், தேர்வுக் கட்டணம், ஒரு மடிக்கணினியின் விலை போன்றவை உள்ளடங்கும். மாணவர்களின் வங்கிகளில் கல்வி உதவித் தொகை செலுத்தப்படும். மாணவர்கள் படிப்பு முடியும் வரை நான்கு ஆண்டுகளுக்கும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது,'' என்றார்.வேளாண் முதன்மையர் வெங்கடேச பழனிசாமி, வங்கி கிளை மூத்த துணைத் தலைவர் ஏக்பால் மனோஜ், தமிழக, புதுச்சேரி மூத்த துணைத் தலைவர் ஜித்தேஷ், கோவை துணைத் தலைவர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.