உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடகளப்போட்டியில் சீறிப்பாய்ந்த பள்ளி மாணவ - மாணவியர்

தடகளப்போட்டியில் சீறிப்பாய்ந்த பள்ளி மாணவ - மாணவியர்

கோவை;நேரு ஸ்டேடியத்தில் நடந்த தடகளப்போட்டியில், மாணவ - மாணவியர் சீறிப்பாய்ந்து பதக்கங்களை வென்றனர்.கோவை அதலெடிக் கிளப், கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் சக்தி சர்வதேச பள்ளி சார்பில், 23வது கோடைகால தடகளப் போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.இதில் மாவட்டத்தில் பல்வேறு கிளப் சார்பில் நடத்தப்பட்ட, கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற, 550க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டியில், யுனிக் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை, கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் மூன்றாம் இடத்தை அதலெடிக் பவுண்டேஷன் அணியினர் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, சக்தி சர்வதேச பள்ளி துணை தலைவர் தீபன், ஈகுவிடாஸ் வங்கி மேலாளர் நஸ்ருதீன் பரிசுகளை வழங்கினர்.பரிசளிப்பு விழாவில், கோவை மாவட்ட தடகள சங்க துணை தலைவர்கள் ரமேஷ், சரவண காந்தி, செயலாளர் சம்சுதீன், துணை செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் ஜான் சிங்கராயர், தொழில்நுட்ப குழு தலைவர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை