உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இதுக்கு மேல பேசுனா வழக்கு பேச்சை நிறைவு செய்த சீமான்

இதுக்கு மேல பேசுனா வழக்கு பேச்சை நிறைவு செய்த சீமான்

திருப்பூரில் 'நாம் தமிழர்' வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இரவு, 9:20க்கு மேடைக்கு வந்த அவர், மணி, 9:55 மணியைத் தாண்டியும் பேசிக்கொண்டிருந்தார். திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், உதயகுமார் இருவரும் மேடைக்கு அருகே வந்து, கட்சி நிர்வாகிகளிடம் நேரத்தை குறிப்பிட்டு தெரிவித்தனர். தகவல் சீமானுக்கும் தெரிவிக்கப்பட்டது.சீமான் தனது வாட்சை பார்த்தபடியே, ''இன்னும் இரண்டு நிமிடம் இருக்கு. இதுக்கு மேல பேசுனா, இவன் இன்னமும் பேசுறான்னு வழக்கு போடுவாங்க' எனக்கூறியவர், 'உன்னால் முடியும் தம்பி' என்ற பாடலை பாடி, மைக் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு, 10:03க்கு பேச்சை நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை