உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருள் பறிமுதல்

1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருள் பறிமுதல்

கோவை;போலீசார், உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர்.நேற்று, கோவை காட்டூர் போலீசாருக்கு கோவை காந்திபுரம் சி.கே., காலனியில் உள்ள குடோனில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், 55 கிலோ புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர். இது தொடர்பாக, கோவை கணபதி, செல்வகண்ணன் என்பவரை கைது செய்தனர்.இதேபோல், பீளமேடு கருப்பராயன்பாளையம் பகுதியில், உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அப்பகுதியில் உள்ள குடேன் ஒன்றில், 68 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், விஜயகுமார், 43 என்பவரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.புகையிலைப் பொருட்கள் பதுக்கிய, இரு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன், தலா, ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட, 123 கிலோ புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ