உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து சிட்கோவிலுள்ள பாலாஜி பேப்பர் தொழிற்சாலை வளாகத்திலுள்ள, செல்வ விநாயகர் கோவில் புணரமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த, 11ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.நேற்று முன்தினம் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, துவார பூஜை மற்றும் யாக பூஜைகள் நடந்தன. காலை, 7:30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகத்தை, திருமுருகன்பூண்டி அர்த்தனாரி சிவம், ஈச்சனாரி சரவண சிவாச்சாரியார் நடத்தினர்.தொடர்ந்து மகா அபிஷேகமும், முற்பகல் அலங்கார பூஜை, தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடந்தன. நிர்வாகத்தினர், தொழிலாளர்கள், சுற்றுப்பகுதிகளை சேர்ந்தோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ