உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பொறியியல் கல்லுாரியில் துகள் தொழில்நுட்ப கருத்தரங்கம்

வேளாண் பொறியியல் கல்லுாரியில் துகள் தொழில்நுட்ப கருத்தரங்கம்

கோவை:வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், துகள் தொழில் நுட்பம் குறித்த சர்வதேச பயிலரங்கம் நடந்தது.பயிலரங்கில், வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 'டீன்' ரவிராஜ் பேசுகையில், ''இந்தியாவில் கிளைகளை கொண்ட, அமெரிக்காவில் உள்ள 'அல்டார்' என்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனம், 'டெம்' என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருள் பயன்படுத்தினால், துகள்கள் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்த முடியும்,'' என்றார்.பின்னர், அமெரிக்காவில் உள்ள 'பர்டூ' பல்கலை பேராசிரியர் கிங்ஸ்லி அம்புரோஸ், துகள்களில் மேற்கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து, மாணவர்களுக்கு விளக்கினார்.இவர், கோவை வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் எம்.இ.,மாணவர்.வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சோமசுந்தரம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலின் முக்கியத்தும் குறித்து பேசினார். மத்திய, மாநில ஆராய்ச்சியாளர் பங்கேற்றனர். தனி உறுப்பு மாதிரியாக்கம், தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு அமர்வுகளும் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ