| ADDED : ஜூன் 25, 2024 12:14 AM
கோவை;குடிநீருடன் சாக்கடைநீர் கலந்து வருவதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோவை புலியகுளம் பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த ஒரு வார காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அப்பகுதி பொதுமக்கள் நேற்று, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், புலியகுளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அங்கு வந்த போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியினர் கூறுகையில், 'கடந்த ஒரு வாரகாலமாகவே, குடிநீரில் துர்நாற்றத்துடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனாலேயே, சாலை மறியலில் ஈடுபட்டோம்' என்றனர்.