உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 9 மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது

9 மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரான ஹப்ஸா, சிறுமுகை அருகே உள்ள அரசு பள்ளியில், மாணவியருக்கு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் குறித்து, விழிப்புணர்வு வழங்கினார். அப்போது, பள்ளி மாணவியரிடம், தங்களுக்கு இதுபோன்று ஏதாவது நடந்துள்ளதா என கேட்டார்.அப்போது அவரிடம், 7 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவியர், தங்களை பள்ளியில் உள்ள இடைநிலை ஆசிரியர் நடராஜன், 56, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறினர். இதை அப்போதே பள்ளி ஆசிரியர்கள் கீதா, ஷியாமளாவிடம் தெரிவித்ததாகவும் கூறினர்.இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஸா, சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிதார். புகார், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது.வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், நேற்று ஆசிரியர் நடராஜனை, போக்சோவில் கைது செய்தனர். தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கு, சம்மன் அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்