கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது.திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல படகு சவாரியும் துவங்கப்பட்டுள்ளது. ஸ்பீடு போட், அக்குவா போட், பெடல் போட், குழந்தைகளுக்கு பெடல் போட், குருப் போட் போன்ற பல்வேறு போட்டுகள் இயக்கப்படுகின்றன. தற்போது புதுவரவாக ஷார்க் (சுறா) போட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. போட் ஹவுஸ் மேலாளர் கூறியதாவது:உக்கடம் பெரியகுளம் போட் ஹவுசில் அதிகபட்சம், 15 பேர் செல்ல கூடிய போட் மட்டுமே இருந்தது. தற்போது, 30 பேர் பயணம் செய்ய கூடிய சார்க் போட் வந்துள்ளது. இதில், சவாரி மட்டும் அல்லாமல் திருமண நாள், பிறந்த நாள் கொண்டாட்டங்களை கொண்டாடலாம். 12:00 மணி முதல், 8:00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, முன்பதிவு அவசியம். கொண்டாட்டத்திற்கான அலங்காரங்கள் செய்து தரப்படும்.படகு சவாரி வார நாட்களில், 10:00 மணி முதல், 8:00 மணி வரையும், வார நாட்களில், 10:00 மணி முதல், 9:00 மணி வரையும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளலாம். குளத்தை சுற்றி ஒரு பெரிய ரவுண்ட் அழைத்து செல்லப்படுவார்கள். ஷார்க் போட்டில், 30 பேர் வந்தால் தான் அனுமதி என்பது இல்லை. டிக்கெட் ஆன்லைன் வாயிலாகவும் செய்து கொள்ளலாம். அப்போது டிக்கெட் விலை குறைவு, ஆபர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஷார்க் போட், கோவையில் தான் முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது.