மேலும் செய்திகள்
அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
09-Aug-2024
போத்தனூர்;போடிபாளையத்தில் மாசு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலையை மூடக்கோரி, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சீரபாளையம் பஞ்.,க்குட்பட்ட பகுதியில் சாலை போட பயன்படுத்தும், ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதிலிருந்து வெளியாகும் துர்நாற்றம், நச்சுப்புகை, சுற்றுப்பகுதியில் வசிப்போருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தோல் பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது. இதனால் இத்தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதியினர் பஞ்., தலைவர் கணேசனிடம் மனு கொடுத்தனர். இருமுறை பஞ்., உறுப்பினர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாசு கட்டுப்பாடு வாரியத்தினரும் ஆய்வு செய்தனர். இருப்பினும், தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுக்கரை ஒன்றிய பா.ஜ., சார்பில் நேற்று, போடிபாளையம் -- சீரபாளையம் சந்திப்பில், ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் வசந்தராஜன் பேசுகையில், தொழிற்சாலையை மூட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், என்றார்.தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கண்டன கோஷமிட்டனர். 50 பெண்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
09-Aug-2024