உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடோனில் இரும்பு திருடிய ஆறு பெண்கள் கைது

குடோனில் இரும்பு திருடிய ஆறு பெண்கள் கைது

கோவை[:குடோனில் பழைய இரும்பு திருடிய ஆறு பெண்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பீளமேடு, வ.உ.சி., காலனியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா,36; தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் நிறுவனத்தின் குடோனுக்கு சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பெண்கள் சிலர் அங்கிருந்த சணல் பைகளில் பழைய இரும்பு, கம்ப்யூட்டர் பாகங்கள், செம்பு கம்பி உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டிருந்ததை பார்த்து, சத்தம் போட்டார்.அங்கு வந்த நிறுவன ஊழியர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த முருகாய்,30, காயத்திரி,27, சந்தியா,25, மற்றொரு காயத்திரி,24, ராணி,27 உட்பட ஆறு பேரை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆறு பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ