உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகை கக்காத இ-ஆட்டோ; புழக்கத்துக்கு வந்தாச்சு!

புகை கக்காத இ-ஆட்டோ; புழக்கத்துக்கு வந்தாச்சு!

கோவை;மின்சாரத்தில் இயங்கும் வகையிலான, 25 'இ-ஆட்டோ'க்கள், கோவையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.புகை இல்லை. கையிலிருந்து காசு போட்டு பெட்ரோல் நிரப்ப வேண்டியதில்லை. வீட்டில், 5 மணி நேரம் சார்ஜ் போட்டால் 150 கி.மீ.,வரை, 60 கி.மீ., வேகத்தில் பயணிக்கலாம். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத இ- ஆட்டோ கோவையில் புழக்கத்துக்கு வந்துள்ளது. இதற்கு ஆட்டோ டிரைவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.'இ-ஆட்டோ' டிரைவர் வெங்கடேஷ் கூறியதாவது:நாளொன்றுக்கு 300 முதல் 500 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்தால், 100 முதல் 150 கி.மீ., வரைசாதாரண ஆட்டோக்களை இயக்கலாம். ஆனால் தற்போது எந்த செலவுமின்றி, 150 கி.மீ., இயக்கலாம். ஆனால் ஆட்டோவுக்கான முதலீடு மட்டும் ரூ.4 லட்சம். வங்கியில் கடன் பெற்று வாங்கியிருக்கிறேன். ஆட்டோ ஓட்டி தவணை செலுத்தி சொந்தமாக்கிக்கொள்ளலாம். இ-வாகனங்கள் வரவேற்புக்குரியது; சூழல் பாதிப்புகள் ஏற்படாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி