கோவை: கோவை அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில், பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் குழுவால், ' டீப் லேர்னிங் பேஸ் டிடக்சன் அப்ளிகேஷன்' சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், நானோ டெக்னாலஜி, 3டி பிரிண்டிங் உட்பட பல்வேறு ஆராய்ச்சிகள், தொடர்ந்து நடந்து வருகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் கீழ், புதிய சாப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, உதவி பேராசிரியர் பிரீத்தி கூறியதாவது: மனிதர்களின் உணர்வுகளை படம் பிடிக்கும் நோக்கில், சாப்ட்வேர் உருவாக்கினோம். இதனை பயன்படுத்தி பள்ளி ஒன்றில் ஆசிரியர்களின் உணர்வுகள் மாற்றத்தால், கற்றல்- கற்பித்தலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டோம். காலை, 9:00 மணி முதல் மாலை பள்ளி முடியும் வரை, ஒரு மணிக்கு ஒருமுறை சாப்ட்வேர் பயன்படுத்தி, ஆசிரியர்களின் உணர்வுகளை ஆய்வு செய்தோம்.காலையில் மகிழ்ச்சியுடன் துவங்குபவர்கள், படிப்படியாக கோபம், சலிப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியதை அறிந்தோம்.ஆசிரியர்களின் உணர்வுகள் சிறப்பாக இருந்தால் மட்டுமே, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மாணவர்களுக்கு சரியாக அமையும். இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி, கைதிகளின் மனநிலை, அறுவை சிகிச்சைக்கு முன் டாக்டர்களின் மனநிலை என பல்துறைகளில், இந்த சாப்ட்வேரை பயன்படுத்தலாம்.சாப்ட்வேர் காப்புரிமை பதிவுக்கு சமர்ப்பித்துள்ளோம். காப்புரிமை பெற்றபின், வணிக ரீதியாக இதனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார். காலை, 9:00 மணி முதல் மாலை பள்ளி முடியும் வரை, ஒரு மணிக்கு ஒருமுறை சாப்ட்வேர் பயன்படுத்தி, ஆசிரியர்களின் உணர்வுகளை ஆய்வு செய்தோம். காலையில் மகிழ்ச்சியுடன் துவங்குபவர்கள், படிப்படியாக கோபம், சலிப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியதை அறிந்தோம்.