உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

பாலக்காடு:பாலக்காடு அருகே, காய்ச்சலால் தாய் இறந்த துக்கத்தில், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி சேந்தகாடு பகுதியை சேர்ந்தவர் சின்னா, 75. இவரது மகன் குருவாயூரப்பன், 40. திருமணமாகாத இவர் கூலி வேலை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சின்னா, நேற்று காலை இறந்தார். தன் தாய் இறந்த துக்கத்தில் இருந்த குருவாயூரப்பன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதை கண்ட ஊர்மக்கள் கோட்டாயி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீசார் கூறுகையில், 'சின்னா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் இறந்ததால் விரக்தியடைந்த குருவாயூரப்பன், தாய்க்கு பின் தனக்கு யாரும் இல்லை என்பதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.பிரேத பரிசோதனைக்கு பிறகே, இறப்புக்கான காரணம் தெரியவரும். இதுபற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை