உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாமனார் வீட்டு கதவில் தீ வைத்த மருமகன் கைது

மாமனார் வீட்டு கதவில் தீ வைத்த மருமகன் கைது

கோவை, : மனைவி உடனான சண்டையில், மாமனார் வீட்டு கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.தடாகம் ரோடு, மீனாட்சி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 60; ஆட்டோ டிரைவர். இவரது மகளை, 11 ஆண்டுகளுக்கு முன்பு வேடபட்டி, நம்பியழகன்பாளையத்தை சேர்ந்த மதன்ராஜ், 34 என்பவர் திருமணம் செய்தார். தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.மதன்ராஜ் தனது மனைவியுடன், அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த, 17ம் தேதி மீண்டும் சண்டை ஏற்பட, தொண்டாமுத்துார் போலீசாரிடம் ராதாகிருஷ்ணனின் மகள் புகார் அளித்துள்ளார். விசாரணையின் நிறைவில், மதன்ராஜை கோர்ட்டில் அணுகி விவாகரத்து செய்வதாக எழுதி கொடுத்துவிட்டு, தந்தையின் வீட்டுக்கு அப்பெண் சென்றுவிட்டார். அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற மதன்ராஜ் வீட்டு கதவிலும், காலணிகள் வைக்கும் ஸ்டாண்டிலும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், மதன்ராஜை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ