உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொறியியல் கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

பொறியியல் கல்லுாரியில் சிறப்பு பட்டிமன்றம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் தமிழிசைச் சங்கம் சார்பில் 'சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்குத் துணையா, வீழ்ச்சிக்கு வழியா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த பட்டிமன்றத்தின் துவக்கமாக, தமிழிசைச் சங்கச் செயலாளர் சண்முகம், அனைவரையும் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக பங்கேற்றார்.சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்குத் துணையே, வீழ்ச்சிக்கு வழியே என்ற தலைப்பில் பேசினர். முடிவில், சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்குத் துணையே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி, கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, டீன்கள் செந்தில்குமார், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி