உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் சிறப்பு இருதய பரிசோதனை முகாம்

கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் சிறப்பு இருதய பரிசோதனை முகாம்

கோவை - சத்திரோடு, கோவில்பாளையத்தில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், சிறப்பு இருதய பரிசோதனை முகாம், நேற்று துவங்கியது; வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.கோவில்பாளையம் கே.எம்.சி.எச்., மருத்துவ ஆலோசகர்கள் கூறியதாவது:சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இருதய பாதிப்பு, மாரடைப்பு ஏற்படுகிறது; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பொதுவாக உள்ளது.இருதய பரிசோதனைகளான ரத்தத்தில் சர்க்கரை அளவு, இ.சி.ஜி., ரத்தத்தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், டி.எம்.டி., எக்கோ பரிசோதனைகள் வாயிலாக பாதிப்பை கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றால், மாரடைப்பை தடுக்கலாம்.உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு, 100க்கும் மேல், உணவுக்கு பின், 180க்கும் மேல் இருந்தல்; ரத்த அழுத்தம், 140 - 80க்கும் மேல் இருந்தல்; ஒரு மில்லி ரத்தத்தில், 200 மி.கி.,க்கு மேல் கொழுப்பு இருத்தல்; உடல் பருமன் குறியீடான, பி.எம்.ஐ., 25க்கு மேல் இருத்தல் மற்றும் புகை பழக்கம், உடற்பயிற்சியின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறைகளால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இருதயத்தில் அடைப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய, ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும். அடைப்பு இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அடைப்பு சரிசெய்யப்படும். இதன் வாயிலாக மாரடைப்பு தடுக்கப்படுகிறது.கோவில்பாளையத்தில் உள்ள கே.எம்.சி.எச்.,ல் சிறப்பு இருதய பரிசோதனை முகாம், நேற்று துவங்கியது. வரும் 31ம் தேதி வரை தினமும் காலை, 9:00 முதல் மதியம், 1:30 மணி வரை முகாம் நடக்கிறது. இதில், இருதய பாதிப்பு கண்டறிய அடிப்படை பரிசோதனைகளான சர்க்கரை பாதிப்பு கண்டறியும் பரிசோதனை, கொழுப்பு சத்தின் அளவு, இ.சி.ஜி., எக்கோ மற்றும் டி.எம்.டி., ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரூ.4,000 மதிப்புள்ள இப்பரிசோதனைகள், சிறப்பு முகாமில், மருத்துவரின் ஆலோசனையுடன், ரூ.1,750க்கு மேற்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு, 87541 87551 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ