உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் இருந்து பரவுனிக்கு சிறப்பு ரயில்

கோவையில் இருந்து பரவுனிக்கு சிறப்பு ரயில்

கோவை;கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் பயன் பெறும் வகையில், கோவையில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள தொழில் நகரமான, பரவுனிக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து வரும் 23ம் தேதி முதல் ஜூன் 25 வரை, வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், செவ்வாயன்று கோவையில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, வியாழன் பகல் 2:30 மணிக்கு பரவுனி சென்றடைகிறது.பரவுனியில் இருந்து, வெள்ளி இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, திங்கள் அதிகாலை 3:30 மணிக்கு கோவை வந்தடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி