உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு சிறப்பு வரவேற்பு

மாணவர்களுக்கு சிறப்பு வரவேற்பு

கோவை;கற்பகம் நிகர்நிலை பல்கலையில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்' விழா நடநத்து.கற்பகம் கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் வசந்தகுமார் பேசுகையில், ''இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் உழைப்பிலே உள்ளது. திருக்குறளை வாழ்க்கை வழிகாட்டி நுாலாக மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.இன்போசிஸ் நிறுவனத்தின் ஏ.வி.பி மற்றும் எச்.ஆர்., லீடர் மற்றும் 'மாற்றம்' அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித் குமார் பேசுகையில், ''மாணவர்கள் தங்களது குறிக் கோளைத் திட்டமிட்டு, காலத்தை முறையாகப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் வெற்றி உறுதி,'' என்றார்.கற்பகம் நிகர்நிலைப் பல்கலை வேந்தர் ராமசாமி, துணைவேந்தர் வெங்கடாசலபதி, மாணவர் நலன் டீன் தமிழரசி, மேலாண்மையியல் டீன் பாலாஜி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி