உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாராமெடிக்கல் மாணவர்களுக்கான  விளையாட்டு போட்டி 

பாராமெடிக்கல் மாணவர்களுக்கான  விளையாட்டு போட்டி 

கோவை : பாராமெடிக்கல் கல்லுாரிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் நேற்று துவங்கின. எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் கல்லுாரி சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 26 முதல் 28ம் தேதி வரை நடக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். இதில் மாணவ மாணவியருக்கு வாலிபால், கோ கோ, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கபடி, டென்னிகாய்ட், த்ரோபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்த துவக்க விழாவில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் செந்துாரபாண்டியன், எஸ்.என்.எஸ்., பார்மசி கல்லுாரி முதல்வர் சதீஷ் குமார், எஸ்.என்.எஸ்., பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் ராஜா செந்தில், எஸ்.என்.எஸ்., அலைடு ஹெல்த் சயின்சஸ் முதல்வர் சுமதி, எஸ்.என்.எஸ்., நர்சிங் கல்லுாரி கவிதா, உடற்கல்வி இயக்குனர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ