| ADDED : ஆக 07, 2024 11:07 PM
கோவை: அரசு கலைக்கல்லுாரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கல்லுாரி வளாகத்தில் நடந்தன.கோவை அரசு கலைக்கல்லுாரியில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பேராசிரியர்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் விதமாக, மூன்று நாட்கள் விளையாட்டு போட்டிகள், அரசு கலைக்கல்லுாரியில் உடற்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது.போட்டிகளை, கல்லுாரி முதல்வர் எழிலி துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் துவக்கி வைத்தார். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஏழு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.செஸ், 50மீ., நடையோட்டம், 100மீ., ஓட்டம், வீல்சேர் பால் த்ரோ, குண்டு எறிதல், சாப்ட்பால் எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வித்துறையினர் செய்திருந்தனர்.