உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்.குளம் குறுமையம்: மாணவர்கள் அபார ஆட்டம்

எஸ்.எஸ்.குளம் குறுமையம்: மாணவர்கள் அபார ஆட்டம்

கோவை : எஸ்.எஸ். குளம் குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோவை கல்வி மாவட்டம் எஸ்.எஸ்.குளம் குறுமைய விளையாட்டு போட்டிகள் ரூபி மெட்ரிக்., பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. இதன் குழு விளையாட்டு போட்டிகள் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.நேற்று நடந்த 19 வயது மாணவர் பிரிவு வாலிபால் போட்டியில், பாரதி மெட்ரிக்., பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில், எஸ்.எஸ்.குளம் அரசு பள்ளியையும், காளப்பட்டி அரசு பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில், இடிகரை அரசு பள்ளியையும் வீழ்த்தி, அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதேபோல், கபடி காலிறுதிப்போட்டியில் விக்டர் வித்யாலயா பள்ளி அணி, 40 - 10 என்ற புள்ளிக்கணக்கில் ஆணையூர் அரசு பள்ளியையும், செயின்ட் ஆன்டனி பள்ளி அணி 35 - 29 என்ற புள்ளிக்கணக்கில், கெம்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியையும் வீழ்த்தின. இதேபோல் மாணவர் டேபிள் டென்னிஸ், 14 வயது பிரிவில் விமல் ஜோதி பள்ளி தர்சன் முதலிடம், டி.எஸ்.ஏ., அரசு பள்ளியின் அமிழ்தேன் இரண்டாமிடம்; 17 வயது பிரிவில் ஏ.ஏ.எம்.ஜி., பள்ளி யஷ்வந்த் முதலிடம், காந்திஜி மேல்நிலைப்பள்ளி ஹரிஸ் இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் ஏ.ஏ.எம்.ஜி., மாணவர் தரணிஸ்வரன் முதலிடம், எஸ்.எஸ்.குளம் அரசு பள்ளி கிரிபிரசாத் இரண்டாமிடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ