| ADDED : ஜூலை 09, 2024 11:04 PM
கோவை:மாநில அளவிலான கபடி போட்டியில் மாணவ - மாணவியர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மதுக்கரை, பாலத்துறையில் உள்ள கலைவாணி மாடல் மெட்ரிக்., பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி, பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 34 மாணவர்கள் அணியும், ஆறு மாணவியர் அணியும் போட்டியிட்டன. இதன் மாணவர் பிரிவில், சேலம் வித்யா மந்திர் பள்ளி முதலிடத்தையும், கலைவாணி மாடல் பள்ளி இரண்டாமிடத்தையும், ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன. மாணவியர் பிரிவில் கலைவாணி பள்ளி முதலிடம், திருப்பூர் பாரதி கிட்ஸ் அணி இரண்டாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, கலைவாணி பள்ளி தாளாளர் நித்யா, செயலாளர் ராஜ்குமார், முதல்வர் பிரீத்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.