| ADDED : ஆக 07, 2024 11:25 PM
சோமனூர் : சோமனூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் மணப்பாறை அணி சாம்பியன் பட்டம் வென்றது.கே.எஸ்.சி. சோமனூர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், நான்காம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி, சோமனூரில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, 58 அணியினர் பங்கேற்றனர். முதல் அரையிறுதி போட்டியில், மணப்பாறை அணி, கே.எஸ்.சி., சோமனூர் அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில் கரூர் அணியை, கோபி அணி வென்றது. பரபரப்பாக துவங்கிய இறுதி போட்டியில், கோபி அணியை, மணப்பாறை அணி, 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. கோபி அணி இரண்டாவது இடமும், சோமனூர் கே.எஸ்.சி. அணி மூன்றாவது இடத்தையும் பெற்றனமுதல் பரிசாக, கோப்பையும், 20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. மற்ற இரு இடங்களுக்கு, கோப்பையுடன் முறையே, 15 ஆயிரமும், 8 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் கபடி வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.