உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான சிலம்பம் போட்டி :பெரியநாயக்கன்பாளையம் குழு சாம்பியன்

மாநில அளவிலான சிலம்பம் போட்டி :பெரியநாயக்கன்பாளையம் குழு சாம்பியன்

பெ.நா.பாளையம்:தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பக் கழகம் நடத்திய, 21வது மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இந்தியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் விளையாட்டு அகாடமி வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.கோவை கற்பகம் நிகர் நிலை பல்கலையில் இரண்டு நாட்கள் நடந்த போட்டியை காவல் துறை துணை ஆணையர் சரவணகுமார் தொடக்கி வைத்தார். இதில், மினி சப் ஜூனியர், சப்ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில், கோவை மாவட்டம் சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இந்தியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் விளையாட்டு அகாடமி மாணவர்கள், 24 பேர் பங்கேற்றனர்.இதில், மினி சப் ஜூனியர் பிரிவில், குத்துவரிசை போட்டியில் சாதுரியா, நெடுங்கம்பு வீச்சு போட்டியில் ஹனீஸ், குழு ஆயுத வீச்சு போட்டியில் சாய்ராம், பிரனேஷ், சிவசத்தியன், ஆகியோரும், சப் ஜூனியர் பிரிவில் குத்துவரிசை போட்டியில், பிரதின்யா ஸ்ரீ, நெடுங்கம்பு வீச்சு போட்டியில் வாகினி, சித்து, இரட்டைவாள் வீச்சு போட்டியில் தீப்தா, குழு ஆயுத வீச்சு போட்டியில், இலக்கியா, அதிசயா, சஞ்சனா, பிரித்திவி, குணசீலன், சூர்யா ஆகியோரும், கம்பு சண்டை போட்டியில், லக் ஷயா, ஜூனியர் பிரிவு நெடுங்கம்பு வீச்சு போட்டியில், ஆருத்ரா, வேல்கம்பு வீச்சு போட்டியில், பிரதக் ஷனா, அலங்கார வீச்சு போட்டியில், ஹர்ஷவர்த்தினி, ஆயுத கோர்வை ஜோடி போட்டியில் கவின், திவாகர் ஆகியோரும், கம்பு சண்டை போட்டியில் கோகுல் ராம், சீனியர் பிரிவு குத்து வரிசை போட்டியில் மனோஸ்ரீ ஆகியோர் தங்கப்பதக்கங்களையும் வென்றனர். கம்பு சண்டை போட்டியில், சுமேஷ் வெள்ளி பதக்கத்தையும் வென்று, மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளிலும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்கள் அனைவரும் விரைவில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களை தலைமை ஆசான் சுதாகர், பயிற்சியாளர் பாண்டிவேல் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ