உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில அளவிலான யோகா போட்டி

மாநில அளவிலான யோகா போட்டி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில், மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது.பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. அதில், 300க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, யோகா திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.பள்ளி தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் பிரகாஷ் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர். மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ