உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., அறிவுறுத்தல்

மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., அறிவுறுத்தல்

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆன்லைன் வாயிலாக நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) பாலமுரளி தலைமை வகித்தார். கோவை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் கேசவ்குமார் மற்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில், அரசுப் பள்ளிகளின் அருகில் 5ம் வகுப்பு வரை செயல்படும் நர்சரி, பிரைமரி தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளை, 6ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.தொழில் படிப்புகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசு வேலைகளில் 20 சதவீத ஒதுக்கீடு, மாணவர்களுக்கான உதவித் தொகைகள், நான் முதல்வன் திட்டம் ஆகியவை குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாகச் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி