உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேம்போர்டு சர்வதேச பள்ளியில் மாணவர் பதவியேற்பு விழா

கேம்போர்டு சர்வதேச பள்ளியில் மாணவர் பதவியேற்பு விழா

கோவை;கேம்போர்டு சர்வதேச பள்ளியில், 15வது மாணவர் பதவியேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கோவை சர்வதேச விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்புப்படை கமாண்டன்ட் தினேஷ் தாஹிவத்கர் பங்கேற்றார். அவர் பேசுகையில், ''திறன்களை செம்மைப்படுத்திக் கொள்வது ஒரு மீள் செயல்முறை. மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அனுபவ ரீதியாக கற்பது, வாழ்க்கையை முழுமையாகவும், பயனுள்ளதாகவும் மாற்றும்,'' என்றார்.பள்ளி மாணவர் தலைவராக, லக் ஷ்யா மற்றும் பள்ளி மாணவியர் தலைவியாக ஸ்நேகா மற்றும் பல்வேறு அணித் தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தங்கள் கடமைகள் குறித்து, உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர் தலைவர்களை, விருந்தினர் கவுரவித்தார். பள்ளித்தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் டாக்டர் பூனம் சயால் ஆகியோர் முதன்மை விருந்தினருக்கு, நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி