உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிலம்பம் சுற்றுவதில் மாணவர்கள் சாதனை

சிலம்பம் சுற்றுவதில் மாணவர்கள் சாதனை

கோவை;சிலம்பம் சுற்றி உலக சாதனைப் படைத்த மாணவ, மாணவியை பாராட்டினர்.இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கோவையில் உலக சாதனை சிலம்பம் போட்டியை நடத்தியது.இதில் பா.ரா., சித்தா நாயுடு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி பிரியங்கா ஸ்ரீ, பதினாறு வயது பிரிவிலும், 7ம் வகுப்பு மாணவர் ரீஷ்வந்த ஸ்ரீ, பன்னிரெண்டு வயது பிரிவிலும், நடுகம்பு அலங்கார தொடர் சுற்று பிரிவில் நான்கு மணிநேரம் இருகால்களை கட்டி சிலம்பம் சுற்றியும், குறுகிய வட்டத்திற்குள் நின்று நான்கு மணிநேரம் இடை விடாமல் சிலம்பம் சுற்றியும் உலக சாதனைப் படைத்தனர்.சாதனைப் படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி தியாகராஜன், தாளாளர் சாந்த தியாகராஜன், பள்ளி முதல்வர் காஞ்சன மாலா, பயிற்சியாளர்கள் திருமூர்த்தி, சதீஷ்குமார், பெற்றோர்மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி