உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து மாணவர்கள் விளக்கம்

உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து மாணவர்கள் விளக்கம்

பொள்ளாச்சி:கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை நான்காம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ், ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, அங்கலக்குறிச்சியில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் நன்மைகளை தெரிவித்தும், எவ்வாறு தென்னை மரத்துக்கு இட வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தனர்.மாணவர்கள் கூறியதாவது:அசோஸ்பைரில்லம், பாக்டீரியா வகையை சார்ந்த ஒரு நுண்ணுயிரியாகும். மண்ணில் வாழும் இந்நுண்ணுயிரி, காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்து நிலை நிறுத்தி தென்னைக்கு அளிக்கிறது.பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இடுவதன் வாயிலாக, பயிருக்கு மணிச்சத்து எளிதாக கிடைக்க வழிவகை செய்கிறது. இதனால், அதிக மகசூல் கிடைக்கும்.உயிர் உரங்களானது தென்னைக்கு நுண்சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி, மண்ணின் அங்கக கரிமவளத்தையும் அதிகரிக்கிறது.விவசாயிகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தொழு உரத்துடன் கலந்து, ஒரு மரத்துக்கு வைக்க வேண்டும்.நான்கு மாதத்துக்கு ஒரு முறை என, ஆண்டுக்கு மூன்று முறை வைப்பதால், நிலையான மற்றும் வளமான தேங்காய்களை பெற முடியும்.இவ்வாறு,கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை