உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 50 ஆண்டுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்

50 ஆண்டுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்

கோவை;கோவை அவினாசிலிங்கம் பயிற்சிப் பள்ளியில், 1971 முதல் 1973ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்கள், நேற்று நேரில் சந்தித்து மகிழ்ந்தனர்.ஈரோடு, கோபிசெட்டிபாளையம் கோபிஸ் கிட்சன் ஹாலில் நடந்த சந்திப்பில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து, முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அவர்கள், மறக்கவே முடியாத பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். ஆசிரியர் பழனிச்சாமி, அண்ணாதுரை ஆகியோர் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ