உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்

வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 54வது நிறுவன நாள் விழா நடந்தது. விழாவுக்கு, வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார்.பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் முருகேச பூபதி, ராமசாமி, பதிவாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், சிறப்பு விருந்தினர் நபார்டு வங்கி தலைவர் ஷாஜி பேசியதாவது: பயிர் உற்பத்தியை அதிகரிப்பதில், நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில், பெரிய முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. 3டி தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் மற்ற பகுதிகள் குறித்தும் கற்றுக் கொள்ள வேண்டும்.மதுரை 'அக்ரி பிசினஸ் இன்குபேஷன் போரத்திலும்', நபார்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் பல்கலையின் மற்ற கல்லூரிகளிலும் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். மக்கள் விவசாயத்தை மட்டும் சார்ந்திருப்பதை குறைத்து, தொழில்முனைவோராகவும் மாற வேண்டும். அனைவரும் இணைந்து செயல்பாட்டால், வேலையின்மை பிரச்னை தீர்க்கப்படும். புறநகர்ப் பகுதிகளில் உள்ள இளைஞர்களை, தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்கில், 'நபார்டு ஸ்கில் விஷன்' எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மாணவர்கள் அரசு வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல், வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

விருது வழங்கி கவுரவம்

பல்கலைக்கழக சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது உணவுப் பதப்படுத்தும் பொறியியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணனுக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருது அறுவடை பின்சார் தொழில்நுட்பத் தலைவர் பியூலாவுக்கும் என, 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.பல்கலையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசியரல்லாதோர் 120 பேருக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. சிறந்த கல்லூரிக்கான விருது, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பல்கலை முதன்மையர் வெங்கடேச பழனிசாமி பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை