பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குறுமயை அளவிலான போட்டிகளில், மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில்,மேற்கு குறுமைய அளவிலான செஸ் மற்றும் கேரம் போட்டிகள், என்.ஜி.எம்., கல்லுாரியில் நடக்கிறது. போட்டியில், 11வயது பிரிவில், ரைஸ் மெட்ரிக் பள்ளி முதல் இரண்டு இடத்தையும், மாணவியர் பிரிவில், பி.கே.டி., பள்ளி முதலிடமும், அக் ஷயா அகாடமி இரண்டாமிடமும் பெற்றன.14 வயது பிரிவில், மாணவர்களுக்கான பிரிவில், மகாலிங்கபுரம் ஏ.எம்.எஸ்., பள்ளி முதலிடமும், ஸ்ரீ விநாயகா பள்ளி இரண்டாமிடமும்; மாணவியர் பிரிவில், பி.கே.டி., பள்ளி முதல் இரண்டு இடத்தையும் பிடித்தன.17 வயது மாணவர் பிரிவில், நாச்சியார் வித்யாலயம் பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி நகராட்சி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. மாணவியர் பிரிவில், பி.வி.எம்., பள்ளி முதல் இரண்டு இடத்தை பிடித்தன.19 வயது மாணவர் பிரிவில், பி.வி.எம்., பள்ளி முதலிடமும், ருக்மணியம்மாள் பள்ளி இரண்டாமிடமும் மாணவியர் பிரிவில், பி.வி.என்., பள்ளி முதலிடமும், அக் ஷயா அகாடமி இரண்டாமிடமும் பெற்றன.தொடர்ந்து, மேற்கு குறுமைய அளவிலான கேரம் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன. போட்டிகளை, ஆர். கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளி ஒருங்கிணைத்து நடத்துகிறது.* கிழக்கு குறுமைய விளையாட்டு போட்டிகள், சிறுகளந்தை விக்னேஸ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. செஸ் போட்டியில், 11 வயது மாணவர் பிரிவில், பொன்னான்டகவுண்டனுார் பள்ளி முதலிடமும், ஆதித்யா வித்யா மந்திர் இரண்டாமிடமும், மாணவியர் பிரிவில், ஆரோக்கிய மாதா பள்ளி முதலிடமும்; ராமகிருஷ்ணா நகர் நகராட்சி பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.14வயது மாணவர் பிரிவில் விக்னேஸ்வரா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி முதலிடமும், வெங்கிட்ராஜ் எம்.எச்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும்; மாணவியர் பிரிவில் வெங்கிட்ராஜ் எம்.எச்.எஸ்., பள்ளி முதலிடமும், மாரியம்மாள் பெண்கள் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.17 வயது மாணவர் பிரிவில், வடசித்துார் அரசுப்பள்ளி முதலிடமும், விஸ்வதீப்தி பள்ளி இரண்டாமிடமும்; மாணவியர் பிரிவில் வடசித்துார் பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி எல்.எம்.எச்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.19 வயது மாணவர் பிரிவில் பழனிக்கவுண்டனுார் பள்ளி முதலிடமும், இடையர்பாளையம் அரசுப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.மாணவியர் பிரிவில் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி முதலிடமும், மாரியம்மாள் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.கிழக்கு குறுமைய அளவிலான கேரம் போட்டி, சிறுகளந்தை விக்னேஸ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கிழக்கு குறுமைய செயலாளர் வெங்கடாச்சலம் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.* கோட்டூர் குறுமைய அளவிலான போட்டிகள் நேற்று துவங்கப்பட்டன. ஆவ்லா இன்டோர் மையத்தில் பேட்மிட்டன் போட்டிகளும்; போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தும் திவான்சாபுதுார் அரசுப்பள்ளியில் செஸ், கேரம் போட்டிகள் நடைபெற்றன. அதில், மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர்.