உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய விலையில் செயல் விளக்க திடல்கள்

மானிய விலையில் செயல் விளக்க திடல்கள்

ஆனைமலை;'ஆனைமலை வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில், மானிய விலையில், 30 ெஹக்டர் செயல்விளக்க திடல்கள் அமைத்திட இலக்கு பெறப்பட்டுள்ளது,' என, வேளாண்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.இதுகுறித்து, ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:ஆனைமலை வட்டாரத்தில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் சிறு தானியங்களான சோளம், கம்பு, பயிர், எண்ணெய் வித்து பயிர்களான எள், நிலக்கடலை சாகுபடி செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த அரசு மானியம் வழங்கியுள்ளது.விவசாயிகள் ஊக்கப்படுத்துவதற்காக, ெஹக்டேருக்கு, 6,000 ரூபாய் வீதம் விதை, திரவ உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, டிரைகோடர்மா விரிடி பூஞ்ஞான கொல்லிகள், மானிய விலையில், 30 ெஹக்டேர் செயல்விளக்க திடல்களாக அமைத்திட ஆமைனலை வேளாண்துறைக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது.விருப்பம் உள்ள விவசாயிகள், கோட்டூர், ஆனைமலை வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை