உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ேஹாமம்

சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ேஹாமம்

உடுமலை,: உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ேஹாமம் மற்றும் சுதர்சன லட்சார்ச்சனை நடக்கிறது.உடுமலை நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஆனி மாதம் சுதர்சன ஜெயந்தியையொட்டி, சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு சுதர்சன ேஹாமம் மற்றும் லட்சார்ச்சனை சிறப்பு பூஜை நேற்று துவங்கியது.நேற்று காலை, 9:00 மணிக்கு விஷ்வச்சேன ஆராதனம், புண்யாகம், வாஸ்து சாந்தி, தீபாராதனை, தீர்த்தம் வழங்கப்பட்டது.மாலையில் கலச ஸ்தாபனம், விசேஷ ஆராதனம், முதற்கால அக்னி பிரதிஷ்டை, முதல் ஆவர்த்தி ேஹாமம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இன்று, காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது. மறுநாள் மந்திர ேஹாமங்கள், மகா திருமஞ்சனம், வெள்ளிக்கவச சேவை வழிபாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை