உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிற்க இடமின்றி தவிப்பு; கூடுதல் நிழற்கூரை தேவை

நிற்க இடமின்றி தவிப்பு; கூடுதல் நிழற்கூரை தேவை

வால்பாறை;வால்பாறை காந்திசிலை வளாகத்தில், பயணியர் அவதிப்படுவதை தவிர்க்க, கூடுதல் நிழற்கூரை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும், காந்திசிலை வளாகத்தில் இருந்து எஸ்டேட் பகுதிக்கான பஸ்களும் இயக்கப்படுகின்றன.குறுகலான இடத்தில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.குறிப்பாக பள்ளி, கல்லுாரி முடிந்த பின் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதை தவிர்க்க, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து காந்திசிலை வரையினான சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். காந்திசிலை பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி, அந்த இடத்தில் கூடுதலாக பயணியர் நிழற்கூரை கட்ட வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ