உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடைகால பயிற்சி நிறைவு விழா

கோடைகால பயிற்சி நிறைவு விழா

கோவை;ஏ.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏ.பி.ஜே., ஸ்போர்டஸ் அகாடமி சார்பில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் இரண்டு மாதங்களாக நடந்தது. இதில் சுமார் 30 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து, செஸ், சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா பச்சாபாளையம் ஆபீசர்ஸ் காலனியில் நடந்தது. பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத், பேராசிரியர் ராஜசேகர் ஆகியோர் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சீருடைகளை வழங்கினர். ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் வினோத், மதன்ராஜ், சுந்தரவள்ளி, சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை