உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி வைபவம்

லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி வைபவம்

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி மாத சுவாதி வைபவம் நடந்தது. காரமடை அடுத்த சென்னிவீரம்பாளையத்தில், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. நேற்று, ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு வைபவ பூஜைகள் நடந்தன. காலையில் நடை திறந்து பெருமாளுக்கு கலச ஆவாஹனம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்த பின், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை