கோவை;கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தண்டுமாரியம்மன் கோலில் திருவிழாவை முன்னிட்டு நாளை (24ம் தேதி)தீச்சட்டி ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலமானது கோனியம்மன் கோவிலில் இருந்து காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, லிங்கப்பசெட்டி வீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, காளீஸ்வரா மில் ரோடு, நஞ்சப்பா ரோடு வழியாக அவிநாசி ரோடு மேம்பாலத்தை ஒட்டி வலதுபுறம் திரும்பி, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் அடியில் சென்று இடது புறம் திரும்பி தண்டுமாரியம்மன் கோவிலை சென்றடைகிறது. எனவே, காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுகிறது.*பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் அல்லது பேரூர் பைபாஸ் சாலையில் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.*மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் தடாகம் ரோட்டில் இருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் ஊர்வலம் புரூக்பாண்ட் ரோடு அடையும் போது பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் பொன்னையாராஜ புரம், சொக்கம் புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.*பேரூர் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையாராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க்கை அடைந்து அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்லலாம்.*அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் வழியாக உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் அண்ணாசிலை சந்திப்பில் இடது புறம் திரும்பி ஒசூர் ரோடு, ரேஸ்கோர்ஸ் வழியாகவோ, அரசு கலைக் கல்லுாரி ரோடு வழியாகவோ அல்லது ரயில்வே ஸ்டேஷன் வழியாகவோ திருச்சி ரோட்டை அடைந்து செல்லலாம்.*திருச்சி ரோட்டில் இருந்து டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள் சுங்கத்தில் இடது புறம் திரும்பி வாலங்குளம் பைபாஸ் வழியாகவும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும் உக்கடம் அடைந்து செல்லலாம்.*ஊர்வலம் முக்கியமான வீதிகளைக் கடக்கும்போது, போக்குவரத்து வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். லாரிப் போக்குவரத்து காலை,6:00 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை அவிநாசி ரோடு மற்றும் ஊர்வலப் பாதை உள்ள பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.