உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் விமானப்படை தளத்தில் தாரங் சக்தி போர் விமான பயிற்சி

சூலுார் விமானப்படை தளத்தில் தாரங் சக்தி போர் விமான பயிற்சி

கோவை : இந்தியவிமானப்படை சார்பில், பன்னாட்டு விமான படை கூட்டு பயிற்சி, கோவை மாவட்டம் சூலுாரில் நேற்று துவங்கியது.இந்திய விமானப்படை சார்பில், 61 ஆண்டுகளுக்கு பிறகு, 'தாரங் சக்தி 2024' என்றபன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி, இந்தியாவில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பயிற்சி ஆக., 6 முதல் 14ம் தேதி வரை சூலுாரிலும், இரண்டாம் கட்ட பயிற்சி செப்., 1 முதல் 14ம் தேதி வரை, ஜோத்பூரிலும் நடக்கிறது.'முதல் கட்ட பயிற்சியில், இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்தியா ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் போர் விமான பயிற்சி மேற்கொள்கின்றனர்.துவக்க நாளான நேற்று, ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் போர் விமானத்தில், கோவை வந்தார்.அவர் பேசியதாவது:அலாஸ்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சியை முடித்து விட்டு இங்கு வந்துள்ளோம். இந்திய விமான படையுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பயிற்சி மிகவும் சவாலானதாக இருக்கும். இப்பயிற்சி வீரர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை தெரிந்துக் கொள்ளவும் உதவும். இப்பயிற்சியின் முடிவில், இந்திய விமானப்படையிடம் இருந்து ஜெர்மனி படையினர் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வர் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி பேசியதவது:நம் நாட்டில், 61 ஆண்டுகளுக்கு பிறகு பன்னாட்டு விமானப்படை, கூட்டு பயிற்சி மேற்கொள்வது இதுவே முதல் முறை. ஜெர்மனி விமானப்படை இந்தியாவில் முதன்முறையாக கூட்டு பயிற்சி மேற்கொள்கிறது. இதில், தேஜாஸ், சுகோய், எஸ்.யு., 30, எம்.கே.ஐ., மிக் 29கே, உள்ளிட்ட இந்திய போர் விமானங்கள், ரபேல், யூரோ பைட்டர் டைபூன் ரக போர் விமானங்கள் பங்கேற்கின்றன. பல்வேறு விதமான போர் விமானங்கள், கடினமான அணிவகுப்புகள், வீரர்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.பறக்கும் பயிற்சி, தரை பயிற்சி, கண்காட்சி, கலாசார நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. வீரர்களின் தனித்திறமை, கூட்டு பயிற்சி உள்ளிட்டவை மேம்பட இப்பயிற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியில், ஐந்து நாடுகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை