உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிஜிட்டல் மயமாகிறது டாஸ்மாக் மதுக்கடைகள்

டிஜிட்டல் மயமாகிறது டாஸ்மாக் மதுக்கடைகள்

கோவை;கோவையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிறது. இனி குடிமகன்கள் கூகுள்பே, பேடிஎம்., 'க்யூஆர் ' ஸ்கேனிங் மூலமும் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தி மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம்.கோவை வடக்கில் 160, தெற்கில் 130 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டாஸ்மாக் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகம் டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது.டிஜிட்டல் மயமாகும் பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு துவக்கியது. அப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: மதுபான தொழிற்சாலைகளுக்கு மதுபானங்களை ஆர்டர் கொடுப்பது, அங்கிருந்து சரக்குகளை வாங்கி வாகனத்தில் ஏற்றுவது. அதை அரசு குடோன்களில் வந்து சேர்ப்பது, அங்கிருந்து கடைகளுக்கு வினியோகம் செய்வது. அங்கிருந்து 'குடி'மகன்களுக்கு விற்பனை செய்வது என்று அனைத்துப்பணிகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மட்டுமே எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் மதுபாட்டில்கள் கொண்டுவந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.ஆர்.எஸ்., வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதுக்கடையில் எவ்வளவு சரக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முழுமையான விபரங்களை இருந்த இடத்திலிருந்தே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.மேலும் கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை தேவைக்கு தகுந்தாற்போல் அனுப்பிவைக்க முடியும். அதே சமயம் ஆன்லைன் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பின்பு ஒவ்வொரு மதுபாட்டிலிலும் 'க்யூஆர் கோடு' பதிவு செய்யப்பட்டிருக்கும்.அதில் விலை விபரமும் குறிப்பிட்டிருக்கும். விற்பனையாளர் கையில் இருக்கும் 'பார்கோடு' ஸ்கேன் செய்யும் கருவி வாயிலாக ஸ்கேன் செய்து பில் வழங்கலாம் அதற்கான தொகையை ஜி.பே., பேடிஎம் ஆகிய யு.பி.ஐ.,வாயிலாக எளிதாக செலுத்தலாம். தற்போது பில் புத்தகத்தில் பில் எழுதி வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை