உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால் கற்பித்தல் பாதிப்பு

பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால் கற்பித்தல் பாதிப்பு

அன்னுார் : பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள வேறுபாட்டை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது.மூன்று நாட்களாக சென்னையில் டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 31ம் தேதி கோவை மாவட்டத்தில் அனைத்து துவக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் தற்செயல் விடுப்பு எடுப்பது, சென்னை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது என அறிவிக்கப்பட்டது. இதன்படி அன்னுாரில் இருந்து 50 பேர் சென்னை சென்று நேற்று முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.அன்னுார் வட்டாரத்தில் உள்ள 75 தொடக்க, 16 நடுநிலைப்பள்ளிகள், 263 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். 62 ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். 201 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை.கல்வி அதிகாரிகள், இல்லம் தேடி தன்னார்வலர்களை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கு நியமித்தனர். இதனால் அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. எனினும் மாணவர்களின் கற்பித்தல் முழுமையாக பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை