உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்கள் உருவாக்கிய டெலஸ்கோப் * பள்ளிகளுக்கு கலெக்டர் பரிசளிப்பு

மாணவர்கள் உருவாக்கிய டெலஸ்கோப் * பள்ளிகளுக்கு கலெக்டர் பரிசளிப்பு

கோவை;மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கிகளை, பள்ளிகளுக்கு கோவை கலெக்டர் பரிசளித்தார்.கோவை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் விண்வெளி அறிவியல் கல்வியை கற்றுகொள்வதற்கான, 'நம்ம டெலஸ்கொப்' எனும் தொலைநோக்கிகளை, 'புராஜக்ட் விண்வெளி' திட்டத்தின் கீழ் வடிவமைக்கவுள்ளனர். 'நம்ம டெலஸ்கோப்' பயிற்சிப்பட்டறை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, வானவியல் கல்வி நிறுவனமான ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷனால் கடந்த 18, 19ம் தேதி, மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.இப்பயிற்சிப்பட்டறையில் மதுக்கரை மற்றும் தொண்டாமுத்துார் பகுதியில் இருந்து, 12 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.புராஜக்ட் விண்வெளி திட்டமானது, ரோட்டரி இ-கிளப் மெட்ரோ டைனமிக்ஸ் மற்றும் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பாக, கடந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் வானவியல் கல்வி செயல்திட்டமாகும். இத்திட்டத்தின் வாயிலாக, நடப்பாண்டில் மாணவர்கள் நிலவு, விண்கற்கள், சூரியன், மற்றும் விண்மீன்கள் குறித்து, எளிமையான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.இக்கல்வியாண்டிற்கான துவக்க நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்தி குமார், வாக்கரூ நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஸ் மாத்யூ குரியன் பங்கேற்று, மாணவர்கள் உருவாக்கிய தொலைநோக்கிகளை அவர்கள் பள்ளிகளுக்குப் பரிசளித்தனர். இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) புனிதா அந்தோணியம்மாள், வட்டார கல்வி அலுவலர் நேசமணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கோபாலகிருஷ்ணன், ரோட்டரி மாவட்டம், 3201 மாவட்ட பொதுச் செயலாளர் சுப்ரமணியம், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் கமல், ரோட்டரி இ--கிளப் மெட்ரோ டைனமிக்ஸ் உறுப்பினர்கள், ஆறுமுகக்கவுண்டனுார் அரசுப்பள்ளி ஆசிரியை சத்யபிரபாதேவி, திருமலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிகண்டன், ஓபன் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை