உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை முருகனுக்கு தி.மு.க.,வினர் நன்றி!

மருதமலை முருகனுக்கு தி.மு.க.,வினர் நன்றி!

வடவள்ளி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதால், தி.மு.க., அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா மற்றும் வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்தனர்.கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் மேயர் ராஜ்குமாரும், பா.ஜ., சார்பில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், அ.தி.மு.க., சார்பில், ராமச்சந்திரனும் என மொத்தம், 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்றுமுன்தினம் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், 1,18,068 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தி.மு.க., அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா மற்றும் வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன், தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த தேர்தலில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வேட்பாளர் ராஜ்குமார், மருதமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, பிரசாரத்தை துவங்கி, அதன்பின்பே வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GoK
ஜூன் 06, 2024 12:15

ஒண்ணுமே புரியலையே


Easwar Moorthy
ஜூன் 06, 2024 07:54

உங்க தலைமை இந்து பண்டிகை மற்றும் கோவில்களை வெறுக்கிறது


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை