உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுவாசிக்கும் காற்றுக்கு ஜாதி, மதம் இல்லை

சுவாசிக்கும் காற்றுக்கு ஜாதி, மதம் இல்லை

போத்தனூர்;கோவை, ஆத்துப்பாலம் அடுத்து சுண்ணாம்பு காளவாய் அருகேயுள்ள, தனியார் திருமண மண்டபத்தில், தே.மு.தி.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜனா சுலைமான் இல்ல திருமண நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா மணமக்களை வாழ்த்தினார்.அப்போது அவர் பேசுகையில், ''நாம் சுவாசிக்கும் காற்றுக்கு எந்த ஜாதியும், மதமும் கிடையாது. ஜாதி, மதங்களை கடந்த, மனிதநேய இயக்கமே நமது கட்சி. கேப்டனுக்கு இஸ்லாமிய நண்பர்கள்தான் அதிகம்.மதுரையில் துவங்கிய இந்த பந்தம், இறுதி வரை நீடித்தது. ஹஜ் பயணம் மேற்கொண்டோர் அலைக்கழிக்கப்பட்டது மனவேதனைக்குரியது. கேப்டனின் மறைவுக்குப் பின் நான் வெளியேவருவதில்லை.இது அவரது குடும்ப விழா என்பதால் இங்கு வந்துள்ளேன். மணமக்கள் சுஹைல்- அப்ரின்ஜெஷ்மீரா ஆகியோர், திருவள்ளுவர்- - திருக்குறள், நபிகள் -- குரான், இயேசு கிறிஸ்து -- பைபிள் போல் இணைபிரியாமல் ஒற்றுமையுடன் வாழவேண்டும்,''என்றார்.கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சந்துரு உட்பட, கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ