உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் புத்தகம் ரெடி!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் புத்தகம் ரெடி!

கோவை:தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கோவை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தினத்தன்றே, பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார்.கோடை விடுமுறை நிறைவடைந்து, 2024 -- 2025ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 10ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.பள்ளிகள் திறந்தவுடன், மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் உடனடியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம், கோவை மாவட்டத்துக்குத் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை, பள்ளிகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி நிறைவடைந்துள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 387 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் தினத்தன்றே, மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ